25.09.05 நெல்லை மாநாட்டில் பெண்கள்

செப்டம்பர் 24, 2008

முஸ்லிம் பெண்களை அவமதித்த தினமலர்க்கு எதிரான போராட்டம்

செப்டம்பர் 24, 2008

முஸ்லிம் பெண்களிடம் மன்னிப்புக் கேட்ட ஒபாமா

செப்டம்பர் 24, 2008


அமெரிக்க அதிபர் தேர்தலில் கறுப்பின சமூகத்தைச் சேர்ந்த பராக் ஒபாமா முன்னணியில் நிற்கிறார். தடைகள் பல தகர்ந்து ஒரு கறுப்பின சமூகத்தைச் சேர்ந்தவர் அமெரிக்க அதிபராக வரும் வாய்ப்பு இருப்பதாக தகவல் கள் வரத் தொடங்கி யதுமே உலகெங்கும் குறிப்பாக கிழக்கு உலகத்தில் உற்சாகம் ஊற்றெடுக்க கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

அரசியல் மற்றும் பலம் நிறைந்த யூத லாபியை சமாளிக்க அந்தக் கூட்டத்துக்கு ஆதரவாக அவர் பேசத் தொடங்கினார். ஒருங்கிணைந்த ஜெருஸ்ஸலம் (மஸ்ஜிதே அக்ஸா அமைந்த பகுதி) இஸ்ரேலின் தலைநகராக மாற வேண்டும் என்ற தனது கருத்தை வெளியிட்டார்.

ஒருங்கிணைந்த ஜெருஸ்ஸலமை இஸ்ரேலின் தலைநகராக மாற்றமுடியாது என்று முடிவு கட்டியே யூதர்கள் தங்களது தலைநகரமாக டெல்அவிவை அறிவித்த திலிருந்தே பாலஸ்தீனர்கள் உயிரே போனாலும் ஜெருஸ்ஸலமை முழுமையாக விட்டுக்கொடுக்க மாட்டார்கள் என்று தெரிந்தே யூதர்களே ஓய்ந்திருந்த பிரச்சினையை ஒபாமா கிளப்பினார்.

ஆனால் யாரும் இதை பொருட் படுத்தவில்லை. பாவம் ஒபாமா! ஓட்டுக் காக ஏதேதோ பேசுகிறார் என்றே கருதினர். அதனால் இதனைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் ஒபாமாவை ஆதரிக்கத் தொடங்கினர்.

குடியரசுக் கட்சியின் வேட்பாளரான ஜான் மெக்கெய்னுக்கு தனது பகிரங்க ஆதவை இப்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ் அறிவித்த பிறகு மெக்கெய்னுக்கு இருந்துவந்த ஆதரவு மேலும் குறையத் தொடங்கியது. எல்லாமாகச் சேர்ந்து ஒபாமா வுக்கு வலு சேர்த்தது.

இந்நிலையில் ஹிஜாப் அணிந்த இரண்டு இஸ்லா மிய இளம் பெண் களிடம் பராக் ஒபாமா பகிரங்க மன்னிப்புக் கேட்டுக் கொண்ட தகவல் வெளியாகி உள்ளது.

தேர்தல் பிரச் சார பேரணிக்காக ஒபாமா தயாராகும் வேளையில் தொலைக்காட்சி காமெராக் கள் ஒபாமாவை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த நேரம் ஒபாமா எழுந்து நிற்க, பின்வரிசையில் அதிக மாகப் பெண்கள் அமரவைக்கப்பட்டிருந் தார்கள். (தாய்குலத்தின் ஆதரவைக் கவரும் முயற்சியாக இது கருதப்பட்டது) அந்நேரத்தில் பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைக்கும் விதமாக ஒரு காட்சி அரங்கேறியது.

அரங்கத்தில் அமர்ந்திருந்த இரண்டு முஸ்லிம் இளம் பெண்கள் வலுக்கட்டா யமாக எழுப்பப்பட்டு, அந்த இடத்தை விட்டு அகற்றப்பட்டனர். அந்த இரண்டு இளம்பெண்களும் ஹிஜாப் என்னும் தலைமுக்காடு அணிந்திருந்ததே நிகழ்ச்சி அமைப்பாளர்களின் முறையற்ற செயலுக்கு காரணமாக கூறப்பட்டது.

ஹிஜாப் அணிந்த இரண்டு முஸ்லிம் பெண்கள் அவமதிக்கப்பட்ட விவகாரம் அமெரிக்காவில் கடும் விவாதத்தை எழுப்பியது.

ஜனநாயகக் கட்சியின் நிர்வாகிகள் செய்த தவறுக்கு ஒபாமா பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் என்ற குரல் உலகெங்கும் எழுந்தது.

அமெரிக்க முன்னணி முஸ்லிம் அமைப்பான ‘கேர்’ தனது அழுத்தமான கண்டனத்தை பதிவு செய்தது. அமெரிக்கா வாழ் முஸ்லிம்களின் தொடரும் அதிருப்தியினால் ஒபாமா பதீல் மற்றும் ஹெபா ஆரிஃபா என்ற இரண்டு முஸ்லிம் சகோதரிகளிடமும் தனிப்பட்ட முறையில் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

பெண்களை ஆபாசமாக காட்டக் கூடாது!

செப்டம்பர் 24, 2008

ஹிஜாபுக்குப் பின் கண்ட வாழ்க்கை! – சகுந்தலா நரசிம்ஹன்

செப்டம்பர் 24, 2008


திருமதி. சகுந்தலா நரசிம்ஹன் பிரபல எழுத்தாளரும், பெண்ணுரிமைக்குக் குரல் எழுப்பும் சங்கங்களின் பிரதிநிதியுமாவார். சமூகவியலில் முனைவர் பட்டம் பெற்ற இவர், பெண்களின் முன்னேற்றத்திற்கான பயிற்சிப் பட்டறைகளை நடத்தி வருபவராவார். பிராமண சமூகத்தைச் சேர்ந்தவரான இவர் துணிச்சலுடன் “சதி” (இந்தியாவில் விதவைகள் உயிரோடு எரிக்கப்படுதல்) பற்றிய நூலை எழுதி பரபரப்புக்குள்ளானவர். தனது கணவருடன் சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறார்.

‘ஹிஜாபை அணிந்தால்தால் உள்ளே வரமுடியும்’ என்ற நிலை வந்தால் நான் சவூதி அரேபியாவிற்கே செல்ல மாட்டேன். என் கணவர் மட்டும் எவ்வித இஸ்லாமிய ஆடையையும் அணியாதபோது, நான் மட்டும் ஏன் அணியவேண்டும்? என்பதே எனது மறுப்பிற்கு முதல் காரணமாக இருந்தது. என்றாலும் எனது ஆர்வம் வெறுப்பை வென்றது.

சவூதி அரேபியாவின் ரியாத் ஏர்போர்ட்டில் நான் கால்வைத்த கணத்திலேயே மிகவும் பண்போடு “பெண்கள் பகுதி” க்கு அழைத்துச் சென்று அமர வைக்கப்பட்டேன். விசாச் சடங்குகளை முடித்துவர என் கணவர் சென்றிருக்கும் வேளையில் ஒரு குட்டி அரண்மனை போன்று மிக அழகாக வடிவமைக்கப் பட்டிருந்த அந்த அறையின் அலங்காரங்களில் மனம் லயித்துப் போனேன். செல்வச் செழிப்புடன் கூடிய கண்ணியமும் கெளரவமும் ஆண்-பெண் பாகுபாடின்றி அனைவருக்கும் கொடுக்கப்படுவது என் மனதை முதன் முதலாகத் தொட்டு விட்டது!

சவூதிக்குக் கிளம்பும் முன்னரே அங்குள்ள ஹிஜாப் பற்றிய விதிமுறைகளைப் பற்றி அறிந்திருந்த காரணத்தினால், புர்காவினைக் கையோடு கொண்டு வந்திருந்தேன். என்றாலும், ஏர்போர்ட் ஃபார்மாலிட்டீஸ்களை முடித்து நகரத்தின் அழகான வீதிக்களைக் கடந்து ஃபைஸலியா ஹோட்டல் வந்து சேரும் வரை நான் புர்காவை அணிந்து கொள்ள வேண்டும் என்று என்னிடம் யாரும் சொல்லவேயில்லை.

மறுநாள் காலையில், ஹோட்டல் நிர்வாகத்தினர் அழகான எம்ராய்டரிங் செய்யப்பட்ட புதிய கறுப்பு நிற அபாயா (இந்தியாவில் நாம் புர்கா என்று சொல்லும் உடையை சவூதியில் இவ்வாறு தான் அழைக்கிறார்கள்) ஒன்றினைக் கொடுத்தார்கள். இதனை நான் அணிந்து கொண்டால் வெளியே செல்லும் வேளையில் அதிக சவுகரியமாக இருக்கமுடியும் என்று கனிவோடு ஆலோசனை கூறினார்கள்.

“சவுகரியமா? இதன் மூலமா?” என்று மனதில் கேட்டுக் கொண்டேன்.

எனது தோற்றத்திற்கும், தனித்தன்மைக்கும் வேட்டு வைக்கும் இந்த உடை, எனக்கு சவுகரியத்தை அளிக்கப்போகிறதா? என்ற கேள்வியை வெளிக்காட்டாமல் சற்றே சினத்துடன் வாங்கி வைத்துக் கொண்டேன்!. ஆனால் நான் ரியாதில் தங்கியிருந்த அடுத்த ஆறு நாட்களில் என் எள்ளலுக்கும் சினத்திற்கும் தகுந்த பதில் கிடைத்தபோது வியப்பிலாழ்ந்து போனேன்.

நோபல் பரிசுக்கு இணையாக அறிவியல், மருத்துவம் ஆகிய துறைகளில் உலகளாவிய அளவில் சாதனை படைக்கும் விஞ்ஞானிகளுக்கான விருதுகளையும் இரண்டு லட்சம் அமெரிக்க டாலர்கள் பரிசுகளையும் ஆண்டுதோறும் வழங்கும் சர்வதேசப் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்கான அழைப்பு எனக்கு விடுக்கப்பட்டிருந்தது.

மறுநாள் காலையில், அரண்மனையின் உயரிய கம்பீரத்தோடு, பிரம்மாண்டமாய் அலங்கரிக்கப்பட்டிருந்த “பிரின்ஸ் சுல்தான் க்ராண்ட் செரமோனியல் ஹால்” இல் அடியெடுத்து வைத்த எனக்குப் புதிய வியப்பு ஒன்று அறிமுகமானது. அத்துணை பெரிய சபையில் பெண்களுக்காகத் தனிப் பகுதி ஒதுக்கப்பட்டிருந்தது.

பூக்களை மொத்தமாக இறக்குமதி செய்யும் பெரும் நிறுவனம் ஒன்றின் பெண் உரிமையாளர் எனது வலப் பக்கத்திலும் அவருக்கு அருகில் ஒரு பல்கலைக் கழகத்தில் பொருளாதாரம் போதிக்கும் பெண் நிபுணரும் அமர்ந்திருந்தனர். ஒரு முழு ஆண்டின் பெரும்பகுதி நேரத்தினை நியூயார்க்கில் செலவழிக்கும் தனியார் நிறுவனம் ஒன்றின் தலைவியும் ஜே ஆர் டி டாட்டாவின் நெருங்கிய தோழி என்று அறியப் பட்டவருமான ஒரு பெண்மணி எனது இடப்பக்கத்திலும் அவருக்கு அருகில் இளம் பத்திரிகையாளர் பெண் ஒருவரும் அமர்ந்திருந்தார். ஜித்தாவிலிருந்து வந்திருந்த ‘மிகப் பெரும் சொத்துக்களுக்கு வாரிசுதாரர்’ என்று அறியப் பட்ட ஒரு பெண்ணும் எங்களோடு அமர்ந்திருந்தார்.

சரி, இதில் வியக்க என்ன உள்ளது என்கிறீர்களா? அவர்கள் அனைவருமே அணிந்திருந்தது கறுப்பு நிற ஹிஜாப் உடை தான்.

என்னருகில் அமர்ந்திருந்த பெரும் நிறுவன உரிமையாளரான அந்த இளம் பெண் விழா நிகழ்ச்சிகளைப் படம் எடுத்துக் கொண்டிருந்த டிவி கேமராக்கள் எங்களை நோக்கித் திரும்பும் நேரத்தில் எல்லாம் விலகியிருக்கும் தன் முகத்திரையினை சரி செய்து முகத்தை மூடிக் கொண்டார். புதிராகப் பார்க்கும் என் பார்வையினைப் புரிந்தவராக என் பக்கம் சாய்ந்து, “கேமராக்கள் நம்மைப் படம்பிடிப்பதை விட்டும் விலகி விட்டால் எனக்கு தெரியப் படுத்துங்கள்!” என்றார்.

நிகழ்ச்சிக்கு வந்த மற்ற அனைத்துப் பெண்களைப் போலவே இவரும் மிக அழகிய ஆங்கிலம் பேசுவதைக் கேட்டு வியப்பு விலகாமல் ஆர்வத்துடன் நெருங்கி கேட்டேன்: “எதனால் தங்கள் முகத்தினைக் கேமராமுன் காண்பிக்க மறுக்கிறீர்கள்?”

அதற்கு அவர், “நீங்கள் இப்போது அணிந்துள்ள புடவை, ஏதேனும் ஒன்றில் சிக்கி, உங்கள் முழங்கால் வெளியே தெரிவதை நீங்கள் விரும்ப மாட்டீர்கள் அல்லவா? அது போலவே அறிமுகமற்றப் புதியவர்கள் என் முகத்தைப் பார்ப்பதை நான் விரும்பவில்லை!” என்றார்.

“முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவிக்கப்பட்டு அடிமைப்படுத்தப் படுகிறார்கள்” என்ற சொல்லையே இந்தியாவில் திரும்பத் திரும்ப கேட்டிருந்த என் மனதினுள் இது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.

என் அருகில் அமர்ந்திருந்த மற்றொரு பெண் தனது கைகளுக்கும் விரல்களுக்கும் உதட்டுக்கும் கண்களுக்கும் தேர்ந்த ஒப்பனை செய்திருந்ததையும் கவனித்தேன். மனதில் எழுந்த கேள்விகளை அடக்க முடியாமல் அவர் பக்கம் நெருங்கினேன்.

“இத்தனை அற்புதமான அலங்காரங்களைச் செய்துள்ள உங்கள் அழகை இந்த புர்கா சிதைக்கவில்லையா?” பொருளாதார நிபுணரான அப்பெண் மென்மையாக சிரித்தவாறே கூறினார்.

“இல்லவே இல்லை! இத்தனை அலங்காரங்களையும் என் சந்தோஷத்திற்காக மட்டுமே செய்கிறேன். நம் சுவைக்குத் தக்கவாறு உணவைத் தேர்ந்தெடுத்துச் சுவைத்துச் சாப்பிடுவது நமது தனிப் பட்ட விருப்பமில்லையா அது மாதிரி…!” என்றார்.

அத்துடன் நில்லாமல், “இந்த அழகு அலங்காரங்கள் எல்லாம் வேற்று ஆண் ஒருவரை ஈர்ப்பதற்காக அல்லவே? பின்பு ஏன் கவலை?” என்றார்.

அப்படியென்றால் இத்தனை காலம் மேற்கத்திய மற்றும் கீழத்தேய எழுத்தாளர்கள் அனைவரும், “புர்கா என்பது பெண்ணடிமைத்தனம் என்று கூறி வந்தது பொய்யா?” என்ற பெரிய கேள்வி ஒன்று பூதாகரமாக என் மனதில் உருவாவதை உணர்ந்தேன்.

என் கேள்விக்கு விடை தேடும் முயற்சியில் வாரிசுதாரரான ஜித்தாப் பெண்ணிடமும் இது பற்றி உரையாடினேன்.

“உங்களுக்குத் தெரியுமா?” என்று என்னிடம் கேள்வி எழுப்பினார் செல்வச் சீமாட்டியான அந்த பெண். “மேற்கத்திய நாடுகளின் என் பயணங்களில் கவனித்திருக்கிறேன். அலுவல் சார்ந்த உயர் நிகழ்ச்சிகளில் உடல் முழுமையாக மறையும் வண்ணம் பிஸினஸ் சூட் அணிந்து வரும் மேற்கத்தியப் பெண்கள் பலர் இருக்கிறார்கள். இத்தகையோரின் உடைக்கும் ஹிஜாபுக்கும் பெருத்த வித்தியாசம் ஏதுமில்லை!” என்றார்.

“கறுப்பு நிறக் கலாச்சார உடையினை உடல் முழுவதும் சுற்றிக் கொள்ளுதல்” என்று பலரை இதுநாள் வரை கேலி செய்திருந்த எனக்கு, யதார்த்தமான இப்பதில் வெகுவாக யோசிக்க வைத்தது.

பொறுமையின் எல்லையைக் கடந்தவளாக ஆர்வம் மிகுதியில் என் கையில் கொண்டு வந்திருந்த புர்காவை எடுத்து அணிந்து பார்த்தேன். எடுத்த எடுப்பில் சற்றே வெறுப்பாய் உணர்ந்த நான், அடுத்த சில நாழிகைகளில் எனது வெறுப்புத் தளர்வதை உணர ஆரம்பித்தேன். பிற்பாடு ஹிஜாப் அணிந்தவண்ணம் வெளியே செல்லவும் ஆரம்பித்தேன்.

என் போன்றே ஹிஜாப் அணிந்து பார்த்த, மருத்துவத்துறைக்கான பரிசினை வென்ற அமெரிக்கர் ஒருவரின் மனைவி பெண்களின் கூட்டத்திற்கிடையே பேசுகையில், “தான் அணிந்துள்ள ஹிஜாப் மூலம், தான் மிகவும் சவுகரியமாகவே உணர்வதாக”க் குறிப்பிட்டார். “சுருக்கங்கள் நிறைந்த, அடிக்கடி விலகும் எனது ஸ்கர்ட் பற்றி இனிக் கவலையில்லை!” என்று கூறி அங்குள்ள பெண்கள் அனைவரையும் சிரிக்கச் செய்தார்.

வியப்பில் என் விழிகள் அகலும் வண்ணம் நாங்கள் பார்வையிடச் சென்ற தேசியக் கண்காட்சி மையம், பல்கலைக் கழகம், மருத்துவ-ஆராய்ச்சி மையம் என்று எங்கு, எப்பணியில் நோக்கினாலும் பெண்கள் தடங்கலின்றி சுறுசுறுப்பாகப் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் ஹிஜாப் அணிந்தவண்ணம் பணிகளில் ஈடுபட்டிருந்ததைத் தனியாகச் சொல்லவும் வேண்டுமா?

அறிவியல், தொழில்நுட்ப ஆய்வாராய்ச்சி நிலையங்களிலும் உயர் தொழில்நுட்பப் பணிகளிலும் அநாயசமாகவும் எளிமையாகவும் அப்பெண்கள் ஹிஜாபுடன் எவ்வித இடைஞ்சலுமின்றி செயற்படுவதைக் கண்டு வியப்பின் எல்லைக்குச் சென்றேன்.

இந்தியத் தூதர் M.O.H ஃபாரூக் அவர்கள் எங்களுக்காக அவர் வீட்டில் அளித்திருந்த உயர் ரக விருந்தில்கூட பெண்கள் (அதிகாரிகளின் மனைவிகள்) அனைவருக்குமான தனித்த இடத்தில் விருந்து நடந்தது.

அதன் பிறகு ஒரு நாளில், கோல்டு மார்க்கெட் எனப்படும் தங்க நகைகள் விற்கும் கடைவீதிக்குச் சென்று வந்தேன். (பார்ப்பதற்கு மும்பையின் ஜாவேரி பஜார் போன்று ஆனால் அதைவிடச் சிறப்பாக இருந்தது இப்பகுதி) அப்பகுதியில் உள்ள ஷாப்பிங் மால்கள் அனைத்திலும் ஹிஜாபுடன் ஏறி இறங்க எனக்கு மிக மிக எளிமையாகவே இருந்தது.

அந்நேரத்தில் அப்பகுதிகளில் சவூதி நாட்டு படித்த இளம் பெண்கள் பலரைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. அப்படி பார்த்த பல பெண்கள் தங்கள் கைகளில் லேட்டஸ்ட் டெக்னாலஜி மொபைல் ஃபோன்களை வைத்துக் கொண்டு மகிழ்வுடன் பேசிக் கொண்டிருந்தனர். பெண்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த பகுதியில் அமர்ந்து, தன் மொபைல் ஃபோனில் டயல் செய்து கொண்டிருந்த ஓர் இளம் பெண்ணை அணுகினேன்.

அந்தப் பெண், நவீன கலாச்சாரச் சூழலில் வளர்ந்தவர் என்பது பார்க்கும் பார்வையிலேயே தெரிந்தது. படித்த, பகட்டான உடையணிந்த பெண் என்பதால் ஹிஜாப் குறித்த மாற்றுச் சிந்தனையை எதிர்பார்த்து அணுகினேன்.”நீங்கள் ஹிஜாபை விரும்பித்தான் அணிகிறீர்களா?” என்று கேட்டு விட்டேன்.

நொடிக்கூட தாமதிக்காமல் பதில் வந்தது: “இது எனக்கு கண்ணியத்தைப் பெற்றுத் தருகிறது. மேலும் ஒரு உள்ளாடையை அணிவது போன்று எளிமையாகவும் இருக்கிறது” என்றார்.

என்னை ஏறிட்டு நோக்கியவர், என் மனதில் உள்ள குழப்பங்களைப் படித்தது போன்று எதிர்கேள்வி ஒன்றையும் என்னிடமே போட்டார்:

“செரினா வில்லியம்ஸ், இப்போது அணிந்துள்ள ஸ்கர்ட்டை விடச் சிறிய, பிகினி உடையினை அணிந்தால் இன்னும் வேகமாக அவரால் ஆட முடியும்தான். ஆனால் அது அவருக்கு சவுகரியமாக இருக்காது என்பதால் அவர் செய்ய மாட்டார் இல்லையா?” என்றார். இதுநாள் வரை எனக்குக் கிடைக்காத சில விடைகள் சரசரவென்றுக் கிடைக்க ஆரம்பித்தன.

இச்சூழலில், மும்பையின் மலபார் ஹில் பகுதியில் ஒருமுறை நான் கலந்து கொண்ட திருமண டின்னர் பார்ட்டி ஒன்று நினைவுக்கு வந்தது. மணமகளாக அலங்காரம் செய்யப்பட்ட பெண் ஒருத்தி, பல்லாயிரம் ரூபாய்கள் செலவழித்து சிகை அலங்காரம் செய்திருந்தாலும் கூன்கட் (Ghoonghat) எனப்படும் முக்காடு கொண்டு தலைப்பகுதியினை நிகழ்ச்சி முழுவதும் தன்னை மறைத்திருந்தாள். அவளது அலங்கரித்த தலைமுடியை மறைத்திருப்பது பற்றி நான் எழுப்பிய வினாவிற்கு, “கூன்கட் எனப்படும் தலையினை மறைப்பதுதான் பெரியோர்களுக்குச் செய்யும் மரியாதையாகும். இது எங்கள் பாரம்பரிய கலாச்சாரமாகும்; நான் ஏன் அதை மீற வேண்டும்?” என்று பெருமையாகக் கூறுயதே விடையாகக் கிடைத்தது.

எனவே எனக்கு ஏற்பட்ட பலவித அனுபவத்திலிருந்து சில முடிவுகளுக்கு வந்தேன்.

மும்பையில் ஒரு சமுதாயத்தின் பாரம்பரிய கலாச்சாரத்திற்காக ஒரு பெண் தலையை மறைப்பது பெருமையாக கருதப்படுவதும் அது ஆண்களிடையே ‘அடிமைத்தனம்’ என்ற கூக்குரலாக வெளியே வருவதில்லை. ஆனால், இஸ்லாத்தில் பெண்கள் ஹிஜாப் அணிகையில் மட்டும் ‘பெண்ணடிமை’த் தனமாக உருவகப்படுத்தப் படுவது ஏன்? என்ற நெருடல் அவ்வேளையில் எழுந்தது.

ஒவ்வொரு நாட்டிலும் பெண்ணின் உடை அளவிலான கோட்பாடுகள் என்பது உள்ளது என்பது மறுக்கவே முடியாத உண்மை. ஆனால் அது அவரவர் கலாச்சாரம், பாரம்பரியத்திற்கு ஏற்று மாறுபடுகிறது. செரினா வில்லியம்ஸின் உதாரணம் உட்பட.

என்னுடைய ஆறாவது நாளின் முடிவில் அபாயா (ஹிஜாப்) அணிந்த பெண்களில் ஒருத்தியாக என்னை நானே கேட்டுக்கொண்டேன்.

இந்த உடை அணிந்ததன் மூலம் நான் எதுவும் சிரமமாக உணர்கிறேனா?

பெண்ணுரிமைக்காக கடுமையாகப் போராடுபவள் என்ற உணர்வில் இருந்து சற்றும் மாறுபடாமல் என் அடிமனதில் இருந்து எழுந்த பதில்,

இல்லை. எனக்கு எந்தச் சிரமமும் இல்லவே இல்லை!

சவூதி அரேபியாவுக்குச் சென்றதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்! அங்கே ஹிஜாப் அணிந்து வலம் வந்தபோதும்!

இளம்பெண்களை விபச்சாரத்துக்கு தள்ளும் கும்பல்! மடக்கிப் பிடித்தது தமுமுக!!

செப்டம்பர் 24, 2008

காதல் என்ற பெயரில் வீட்டை விட்டு ஓடும் இளம் பெண்கள் மற்றும் இளைஞர்களின் எண்ணிக்கை பரவலாக அதிகரித்து வருகிறது. திரைப்பட மோகம் மற்றும் டி.வி., தவறான நட்பு, மார்க்கத்தை பற்றிய தெளிவின்மை ஆகிய காரணங்களால் முஸ்லிம் சமுதாயத்திலும் இந்த விஷம் பரவி வருவது அதிர்ச்சியளிக்கும் விஷயம் ஆகும். காதல் கண்ணை மறைக்க ஓடி வரும் இளம் பெண்கள் பலர் விபச்சாரத்துக்கு தள்ளப்படுவது அதிர்ச்சியளிக்கும் உண்மையாகும். இதற்கென்றே பல கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன. சென்னை, பெங்களூர், மும்பை போன்ற பெருநகரங்களில் இவர்களது நடமாட்டம் அதிகரித்துள்ளது.

பெங்களூரை சேர்ந்த இளம் பெண் பர்வீன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 15 வயதான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் காதல் ஏற்பட திருமணம் செய்து கொள்ள தீர்மானித்து இருவரும் வீட்டை விட்டு ஓடி விட திட்டமிட்டனர். திட்டமிட்டதன் அடிப்படையில் பெங்களூர் பஸ் நிலையத்திற்கு பர்வீன் வந்துவிட அவனது காதலன் வரவில்லை. வந்தது சாமிநாதன் என்கிற மதச்சார்பற்ற ஜனதாளம் கட்சியுடைய மாவட்ட நிர்வாகியும், முன்னாள் முதல்வர் குமாரசாமியின் கைத்தடியுமான சாமிநாதன் என்பவன் பஸ் நிலையத்தில் பர்வீனிடம் நைச்சியமாக பேசி அவளை தனது தங்குமிடத்துக்கு அழைத்துச் சென்ற சாமிநாதன் அந்த சிறுமியை 1 மாத காலமாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த பிறகு அந்த சிறுமியை தமிழகத்தைச் சேர்ந்த விபச்சார கும்பலின் தலைவி சித்ரா என்பவளிடம் அவளை விற்றிருக்கிறான்.

சித்ரா என்பவள் இளம் பெண்களை மயக்கி அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதையே தொழிலாகக் கொண்டவள். இந்நிலையில் பாண்டிச் சேரியில் சித்ராவின் விபச்சார விடுதிக்கு சென்ற சென்னையை சேர்ந்த ஒருவரிடம் பர்வீன் தனது நிலைமையை விளக்கிக் கதற, அப்பெண்ணிடம் தொடர்பு எண்களை பெற்றுக் கொண்ட அவர் சென்னை திரும்பியவுடன் ஆயிரம் விளக்கு பகுதி தமுமுக தலைவர் அப்துல் ரஹிமிடம் நடந்ததைக் கூற உடனடியாக தென் சென்னை மாவட்ட பொருளாளர் சலாமிடம் விஷயம் கூறப்பட்டது. இதையடுத்து விபச்சார கும்பலை வளைத்துப் பிடிக்க தென் சென்னை மாவட்ட தமுமுகவினர் திட்டம் வகுத்தனர். இதையடுத்து தகவலைக் கூறிய நபரை வைத்தே சித்ராவுக்கு தொலைபேசியில் பர்வீனை சென்னைக்கு அழைத்து வந்தால் அதிகப்பணம் தருவதாக கூறப்பட்டது. இதற்கு மயங்கிய சித்ரா பர்வீனை அழைத்து வருவதாக கூறினார். இதையடுத்து மே 21ந் தேதி பெங்களூரில் இருந்து புறப்பட்டு வந்த சித்ரா மற்றும் அவளது கும்பலை பிடிக்க தமுமுக நிர்வாகிகள் அப்துல் ரஹிம், ரசூல் ஆயிரம் விளக்கு பகுதி செயலாளர் அக்பர், பக்ரூத்தீன், சையது, தொழிலாளர் அணி செயலாளர் இல்யாஸ், ஆகியோர் வாகனத்தில் புறப்பட்டு சென்றனர். முதலில் கோவளம் வருவதாக தொலைபேசியில் கூறிய சித்ரா பின்னர் வேளச்சேரி, தாம்பரம் என்று அலைகழித்து கடைசியாக செங்கல்பட்டு வருவதாகக் கூறினாள். இதையடுத்து காஞ்சி மாவட்ட நிர்வாகி களுக்கும் தகவல் அளிக்கப்பட்டது. காஞ்சி மாவட்ட துணைச் செயலாளர் ஹைதர், துணைத் தலைவர் யூனுஸ் அவர்களுடன் இணைந்து கொள்ள செங்கல்பட்டு பைபாஸில் பர்வீன் மற்றும் இன்னொரு பெண்ணுடன் வந்திறங்கிய சித்ராவை அப்படியே மடக்கிப் பிடித்து செங்கல்பட்டு காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

பின்னர் பத்திரிக்கையாளர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலிஸார் நடத்திய விசாரணையில் தர்மபுரியில் விபச்சாரத்திற்காக இளம்பெண்களை ஒரு வீட்டில் சித்ரா அடைத்து வைத்திருப்பது தெரிய வந்தது. அந்தப் பெண்களும் மீட்கப்பட்டனர். கர்நாடக போலிஸாரும் சித்ராவை விசாரிக்க சித்ராவின் விபச்சார வலை போலிஸாரால் அறுக்கப்பட்டு வருகிறது. பெங்களூரில் காம வெறியன், சாமிநாதனும் கைது செய்யப்பட்டு உள்ளான். இதையடுத்து பர்வீனின் பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டாள். தங்கள் மகளை காப்பாற்றிய தமுமுகவின ருக்கு கண்கள் தழுதழுக்க நன்றி கூறி விடைபெற்றனர். மிகப்பெரிய விபச்சார கும்பலை கைது செய்ய உதவிய தமுமுகவினருக்கு போலிஸாரும் நன்றி கூறினர். காதல் என்ற பெயரில் அத்து மீறும் இளம் பெண்களும், தங்கள் வீட்டுப் பெண்களை சரியாக கண்காணிக்காத பெற்றோர்களும் உஷார்.


Follow

Get every new post delivered to your Inbox.