செப்டம்பர், 2008 க்கான தொகுப்பு

மகளிர் அணி நிர்வாகிகள்

செப்டம்பர் 25, 2008

மாநில மகளிர் அணிச் செயலாளர் சகோதரி. கோவை சாஜிதா (க/பெ.கோவை சாதிக் மாநில துணைச் செயலாளர்)

மாநில மகளிர் அணி பொருளாளர் : டாக்டர் எஸ்.ஷமீமா (க/பெ.பொறியாளர் ஷாநவாஸ் குவைத் மண்டலச் செயலாளர்)

து.செயலாளர் : சகோதரி ரஹ்மத் நிஷா ஆலிமா (க/பெ. மர்ஹும் அப்துர் ரஹீம்)

து.செயலாளர் : சகோதரி ஷரீபா (க/பெ.ஜைனுல் ஆபிதீன் மாநில செயற்குழு உறுப்பினர்)

உதயமானது தமுமுக மகளிர் அணி

செப்டம்பர் 25, 2008

அநீதிக்கு எதிராக அணி திரள்வோம்!
எழுச்சிகரமான தீர்மானங்களுடன் கூடிய தமுமுக மகளிர் அணி மாநில செயற்குழு

சமுதாயத்தில் நடக்கும் அநியாயங் களை தட்டிக் கேட்பதற்கும், மறுக்கப் பட்ட உரிமைகளைப் போராடி பெறுவதற் கும் சமுதாய ஆண்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்ற முஸ்லிம் பெண்களின் போர்க்குரல் தமுமுக மாநில மகளிரணி செயற்குழுவில் எதிரொலித்தது. இஸ்லாமிய அடிப்படையில் சமுதாயத் தொண்டாற்றிட மகளிருக்கும் களம் அமைத்து கொடுப்பதற்கான முதன் முயற்சியாக மகளிரணியின் மாநில செயற்குழு திருச்சி சிங்காரத் தோப்பில் உள்ள ஜெம் பேலஸ் அரங்கில் கடந்த 27.04.2008 அன்று நடைபெற்றது. தமிழகம் முழுவதிலும் இருந்து 80 பெண்கள் மாவட்ட பிரதிநிதிகளாகக் கலந்து கொண்டனர்.

தமுமுக தலைவர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் தலைமையில், சகோதரி சாஜிதா அவர்களின் திருக் குர்ஆன் விளக்கவுரையோடு நிகழ்ச்சி தொடங்கியது. சகோ.கோவை சாதிக் அறிமுக உரை நிகழ்த்தினார். தமுமுக வின் செயல்பாடுகள் மற்றும் பொதுவான தலைப்புகளில் சகோதரிகளின் கேள்விகளுக்கு மாநில துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ்.ரிபாஃயி பதிலளித்துப் பேசினார். மகளிர் அணி தொடர்பான பல்வேறு விளக்கங்களும் சகோதரிகளின் ஆலோசனைகளும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. தங்கள் சமுதாயப் பணிக்கு எங்கள் கணவர் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவும், ஒத்துழைப் பும் தேவை என நிகழ்வில் கலந்து கொண்ட சகோதரிகள் வேண்டுகோள் விடுத்தனர்.
ஆபாச, கலாச்சார சீர்கேடுகளை பரப்பும் தொலைக்காட்சி தொடர்களை தடை செய்ய வேண்டும். பூரண மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும். 20லி20 கிரிக்கெட் போட்டியில் அரைகுறை ஆடையுடன் ஆடும் ஆபாச நடனத்தை நிறுத்த வேண்டும், விலைவாசி உயர்வை தடுத்து நிறுத்த வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களுடன் எழுச்சியாக தொடர்ந்த செயற்குழுவில் இறுதியாக தமுமுக தலைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் நிறைவுரையாற்றினார். முஸ்லிம் பெண்கள் இஸ்லாமிய கட்டமைப்பில் பேணுதலாக சமூக பணிகளை ஆற்றுவது எப்படி என்று விளக்கிய பேராசிரியர் அவர்கள், ஸஹாபா பெண்கள் வாழ்விலிருந்து மேற்கோள்களை காட்டி மகளிர் அணி செயல்பட வேண்டிய விதத்தை எடுத்துரைத்தார்.

சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள கலாச்சார சீர்கேடுகள், முஸ்லிம் பெண்களிடையே உள்ள மூடநம்பிக்கைகள், சினிமா மற்றும் சின்னத்திரை தொடர்களின் மீதான மோகம் ஆகியவற்றை ஒழிக்கவும் மார்க்க மற்றும் சமுதாய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவும் சூளுரைத்தவர்களாக, மகளிர் அணி வீராங்கனைகள் புறப் பட்டனர். முஸ்லிம் சமுதாயத்தின் சரிபாதி யாக உள்ள முஸ்லிம் பெண்களிடையே மறுமலர்ச்சி ஏற்படும் என்ற நம்பிக் கையை மகளிர் அணி செயற்குழு ஏற்படுத்தியுள்ளது.

செப்டம்பர் 25, 2008

ஒரு வீரத் தாயின் ஆவேசம்

செப்டம்பர் 25, 2008

டெல்லி குண்டுவெடிப்பு தொடர்பாக தேடப்படும் தவுகீர் என்னும் அப்துல் சுபுஹானின் தாயார் தனது மகனுக்கு பகிரங்கமாக வேண்டுகோள் விடுத் திருக்கிறார்.

அப்துல் சுபுஹான் டெல்லி குண்டு வெடிப்பு தொடர்பாக தேடப்படும் ஒரு நபராக இருப்பதாக டெல்லி காவல்துறை தெரிவித்ததைத் தொடர்ந்து நாடெங்கும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அஹ்மதாபாத் மற்றும் டெல்லி குண்டுவெடிப்புகளுக்கு தவுகீர் முக்கிய மூளையாக செயல்பட்டதாகவும் புலனாய் வுத் துறையினர் கூறி வருகின்றனர். ஒரு மனிதன் பிடிபட்டாலே மனம் போன போக்கில் கட்டுக் கதைகளை கட்ட விழ்த்து விடும் சில ஊடக பயங்கர வாதிகளுக்கு குண்டுவெடிப்பு தொடர் பாக ஒருவர் தலைமறைவாக இருக்கிறார் என செய்தி கிடைத்தால் எப்படி இருக் கும்? கும்மாளம் போடாத குறையாக சந்தோஷத்தில் மூழ்கி சதிக் கதைகளை சந்திக்கு ஒன்றாக அவிழ்த்து விடுவார் கள். அதே கதை இங்கும் அரங்கே றியது. லஷ்கரே தொய்பா என்ற தீவிர வாத இயக்கத்தைச் சேர்ந்தவர் அப்துல் சுபுஹான் என்றும், இந்தியாவின் பின் லேடன் என்றும் நம்மூரு தினத்தந்தி கூட செய்தி வெளியிடுகிறது.

நிலைமை இவ்வாறிருக்க, அப்துல் சுபுஹான் என்ற தவுகீர் உயிரோடு இருக்கிறாரோ இல்லையோ என்ற பதைபதைப்பு அவரது குடும்பத்தின ருக்கு ஏற்பட்டது. அப்துல் சுபுஹானின் தாயார் சுபைதா குறைஷி தனது மவுனத்தைக் கலைத்தார். செய்தியாளர் களின் முன் அவரது வழக்கறிஞர் சொலேகருடன் தோன்றினார். உயிர் களை பலிகொண்ட குண்டுவெடிப்பு சம்பவங்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இதுபோன்ற நிகழ்வு களில் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர் கள் சிக்கியிருந்தாலும் அவர்களுக்கும் அதே கதிதான் ஏற்பட்டிருக்கும்.

குண்டுவெடிப்பில் என் மகனுக்கு தொடர்பு இருந்தால் எண் கண் முன்பாக அவன் தண்டிக்கப்படட்டும். எங்கள் குடும்பத்தின் முன்பாகவே அவனை தூக்கில் போடுங்கள். அவனை தூக்கில் போடுவதைத் தடுத்து நிறுத்த மாட்டோம் என ஆக்ரோஷத்துடன் அறிவித்த அந்த வீரத்தாய், தனது மகன் உடனடியாக சரணடைந்து நிரபராதி என தன்னை நிரூபிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

வீரத்தாய் சுபேதா குறைஷியின் அறிவிப்பு பல்வேறு பத்திரிகையிலும் பரபரப்பு செய்தியாக வெளியிடப்பட்டது.

தவுகீர் அப்பாவி

தாயார் கூறுகிறார் என `டைம்ஸ் ஆஃப் இந்தியா’ பத்திரிகை முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டிருக்கிறது. தவுகீரின் தாய் அவரை சரணடையுமாறு வேண்டுகிறார் என தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை முதல் பக்கத்தில் சிறிய செய்தியாக ஆரம்பித்து ஏழாம் பக்கத்தில் செய்தியை தொடர்கிறது.

தினமணி தவுகீரின் தாயார் கூறியதை சிலாகித்து நெகிழ்ந்து தலையங் கமாகவே தீட்டியுள்ளது. இப்படி இந்தி யாவை நேசிக்கும் சகோதரர்கள் இஸ் லாமிய சகோதரர்கள்தான் பெரும்பான்மையினர் என்பதை ஏனைய
மதங்களைச் சேர்ந்த இந்தியர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் தினமணி தனது தலையங்கத்தில் குறிப்பிட்டுள் ளது. கிட்டத்தட்ட அனைத்து ஊடகங் களும் வீரத்தாய் சுபேதா குறைஷியின் கருத்தை நல்ல நோக்கத்துடன் வெளி யிட்டுள்ளன. ஆனால் பிற்படுத்தப்பட்ட மக்களின், உழைக்கும் மக்களின், உழைப்பிலும் உதிரத்திலும் உருவாக்கப் பட்ட தினத்தந்தி இதுபோன்ற சம்பவத் தில் செய்தி வெளியிட்ட விதம் அந்தப் பத்திரிகையை போற்றி வளர்த்த நியாய உணர்வு கொண்ட அனைவரின் முகத்திலும் கரி பூசுவதைப் போன்று அது வெளியிட்ட செய்தி அமைந்தது. குண்டுவெடிப்பு சதிகாரன், இந்தியாவின் பின்லேடன் தவுகீரின் தாய் ஆவேசம் என சற்றும் தனது தகுதிக்கு பொருந்தாத தலைப்பிட்டு செய்தி வெளியிட்டிருக்கிறது.

எல்லா நடுத்தர குடும்பத்தினரைப் போன்றே கனவுகளோடு வளர்த்தேன். குண்டுவெடிப்புகளுக்கு என் மகன் அப்துல் சுபுஹான் குறைஷியே காரணம் என கூறப்படுகிறது. ஆனால் என் பிள்ளைக்கு நான் நல்ல குணங்களை யும், நல்ல பழக்கவழக்கங்களையும் கற்றுக் கொடுத்துள்ளேன். எனவே என் மகன் அப்துல் சுபுஹான் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவான் என எங்க ளால் நம்ப முடியவில்லை என்றும் அந்த வீரத்தாய் சுபைதா குறைஷி தெரிவித் தார். அப்துல் சுபுஹான் என்ற தவுகீரின் விவகாரத்தில்

துருக்கி பல்கலைக்கழகங்களின் சர்வாதிகாரம்!

செப்டம்பர் 25, 2008

துருக்கி பல்கலைக்கழகங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிவதை துருக்கி உச்சநீதிமன்றம் தடை செய்துள்ளது.

99 சதவீத முஸ்லிம்களைக் கொண்ட துருக்கியில் மாணவிகளுக்கு ஹிஜாப் அணியும் உரிமைக்கான போராட்டம் இன்னும் தொடர்ந்து வருகிறது.

11 நீதிபதிகளைக் கொண்ட தீர்ப்பாயம் இந்த அறிவிப்பினை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து நாடெங்கும் போராட்டம் பரவியது.

இஸ்தான்புல் பல்கலைக்கழக மாணவிகள் தடையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹிஜாப் என்னும் தலைக்கவசம் அணிந்து தங்களது போராட்டங்களை நடத்தினர். ஏராளமானோர் இஸ்தான் புல் பல்கலைக்கழகம் முன்பு திரண்டனர்.

துருக்கி குடியரசாக அறிவிக்கப்பட்டு 84 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆளும் ஏ.கே. கட்சி தங்களின் நிர்வாகத்தின் கீழ் உள்ள நகராட்சி அமைப்புகளில் உணவு விடுதிகளில் மதுபான விற்பனையைத் தடை செய்துள்ளது.

ஐரோப்பிய யூனியனில் இணைய துருக்கி முயற்சித்து வருகிறது. ஐரோப்பிய யூனியனில் துருக்கி இணைவதை எதிர்க்கும் சக்திகள் துருக்கி மத
சுதந்திரத்தை மீறுகிறது. மறைமுகமாக இஸ்லாமிய அஜென்டாவை செயல்படுத்துவதாக குற்றம்சாட்டுகிறது. இந்நிலையில் ஹிஜாப் உரிமைக்கான மாணவிகளின் போராட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.

அன்புள்ள அம்மா…

செப்டம்பர் 25, 2008

அவர் நேற்று ரஜிதா. இன்று ஹமிதா. இந்துவாகப் பிறந்து கிருஸ்தவத்தில் இணைந்த குடும்பத்தை சேர்ந்தவர். இவர் பி.பி.ஏ., படிக்கும் பட்டதாரி பெண். சென்னை மண்ணடியை சேர்ந்த இப்பெண் டியூசன் சொல்லி
கொடுப்பதற்காக, ஒரு முஸ்லிம் சகோதரரின் வீட்டுக்கு சென்று வரும் தருணங்களில், அவர் கண்களில் அந்த வீட்டில் இருந்த இஸ்லாம் குறித்த நூல்கள் தனிக் கவனம் பெற்றன.

அந்த நூல்கள் அவருள் பிரள யத்தை, அறிவுத் தாகத்தை தூண்டியதால் கடந்த ரமலானில் ரகசியமாக தண்ணீரை குடித்துவிட்டு நோன்பிருந்திருக்கிறார் வீட்டுக்கு தெரியாமல்!

நாளடைவில் இவரது இஸ்லாமிய தாகம் வெளிப்படையாக தெரிய வர, குடும்பம் கொந்தளித்திருக்கிறது. அதையும் மீறி இஸ்லாத்தை துணிந்து ஏற்றவர், அடைக்கலமும், சட்டஉதவியும் கோரி தமுமுக தலைமையகத்திற்கு வருகை தந்தார்.

அவரது குடும்பம் காவல்துறை உதவியுடன் தமுமுக தலைமையகம் வர, இவரோ அதிகாரிகளிடம் சரமாரியாக ஆங்கிலத்தில் உரையாட அவர்கள் திணறிதான் போனார்கள். தன்னை வற்புறுத்தி வீட்டுக்கு அழைக்கும் தாயாருக்கு 4 மணி நேரத்திற்கும் மேல் இஸ்லாத்தை எடுத்துரைத்து, தனது இஸ்லாமிய அனுபவத்தை விவரித்த பாங்கு சுற்றி நின்ற அனைவரையும் கவர்ந்து விட்டது.

சென்னை டெபுடி கமிஷ்னர் காமினி யின் அழைப்பின் பேரில் தமுமுக வினரின் பாதுகாப்புடன் சென்ற இவர், அங்கையே தனது நிலையை விளக்கியதுடன், அவருக்கும் இஸ்லாமிய அழைப்பு பணியை செய்ய, அவரே அசந்து விட்டார்.

இப்போது தமுமுகவின் வழிகாட்டலில் மதரஸா கல்வியை கற்கப் போகும் அவர், பாசத்தோடு வற்புறுத்தும் தாயாருக்கு ஒரு கடிதத்தை எழுதியிருக்கிறார். அவரது அனுமதியுடன் வாசகர்களுக்காக பிரசுரிக்கிறோம்.
-ஆசிரியர்.

அம்மா நான் உங்களை விட்டு போகிறேன். என்னை மன்னித்துவிடுங்கள். எல்லாவற்றிற்கும் முன்னர் அதற்காக நான் உங்களிடம் மன்னிப்பு
கோருகிறேன். நீங்கள் என்னைப் பற்றி கொண்டுள்ள எண்ணமும், என் நலனில் கொண்டுள்ள அக்கறையும் மகத்தானவை. அதே போன்று நான் என் உள்ளத்தில் தேக்கி வைத்துள்ள உங்கள் மீதான அன்பும், பாசமும் வார்த்தைகளில் வடித்துக்கூற முடியாதவை. உங்கள் அன்பு நிறைந்த முகத்தைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. எனினும் நான் பெறப் போகும் முஸ்லிம் சன்மார்க்கக் கல்வி என்னைத் தடுத்து நிறுத்துகின்றது. இந்தத் தடை இல்லாவிட்டால், நான் ஒரு கணமும் உங்களை விட்டு பிரிந்திருக்க மாட்டேன். உண்மையில் மார்க்கத்தைக் கற்பதன் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும், நான் உணர்ந்திருப்பது தான் நான் உங்களை பிரிவதற்கு காரணம். இருப்பினும் உங்களைப் பற்றிய நினைவால் என் நெஞ்சம் நிறைந்திருக்கிறது. இனி கழியும் ஒவ்வொரு நாளிலும், ஒவ்வொரு நிமிடத்திலும் கருணையை எண்ணிப்பார்க்க போகிறேன். நீங்கள் என் மீது செலுத்தும் அளவற்ற கருணைக்கும், எனக்காக காலமெல்லாம் செய்த தியாகங்களுக்கும் நான் எப்படித்தான் கைமாறு செய்வேனோ? உங்கள் தன்னலமற்ற உதவி, ஒத்தாசைகளை என் நாவினால் எப்படித்தான் வர்ணித்து முடிப்பேனோ? உங்கள் முடிவில்லாத அன்புடன் கூடிய மகத்தான பணிகளுக்கு எந்த விதத்தில் பிரதி உபகாரம் செய்வேனோ? நான் அறியேன் அம்மா! நான் உங்களை விட்டு பிரிவதற்கு நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டது தான் காரணம். நான் யாரையும் காதலிக்க வில்லை. எவருடனும் ஓடிபோய்விட வில்லை. இப்படிப்பட்ட தவறான வழியில் நான் ஒருபோதும் செல்லமாட்டேன். ஏனென்றால் நான் உங்கள் மகள். அம்மா நான் உங்கள் மீது மிகவும் அளவற்ற பாசம் வைத்துள்ளேன். இந்த உலகத்தில் உங்களை பிடித்த அளவிற்கு வேறு யாரையும் எனக்கு பிடிக்காது.

என்னை வெறுத்து விடாதீர்கள்! உங்களுக்கு உண்மையிலேயே என்னைப் பிடிக்குமேயானால் என்னை வந்து பார்க்க வேண்டும். இந்த கடிதத்தை
படிக்கும் போது நீங்கள் எப்படி வேதனைப் படுவீர்கள் என்பதை என்னால் உணர முடிகிறது.

என்னால் எனது நண்பர்கள் யாருக்கும் பிரச்சனைகள் தரவேண்டாம். ஏனெனில் இது நானாக எடுத்த முடிவு. யாரும் என்னைக் கட்டாயப்படுத்தி இஸ்லாத் திற்கு மாற்றவில்லை. நான் சுய நினைவோடு எடுத்த முடிவுதான் இவை. கணேஷ் மாமாவிடம் சொல்லி எந்த ஒரு போலீஸ் பிரச்சனையும் செய்ய வேண்டாம். நான் இப்போது மேஜர். எனக்கு எல்லா முடிவுகள் எடுக்கவும் உரிமை உள்ளதால் இஸ்லாத்தை ஏற்றேன். இதில் எந்த ஒரு உள்நோக்கமும், யாருடைய வற்புறுத்தலும் இல்லை. நீங்கள் காவல் துறையினரை அழைத்து வந்து என்னை வரசொன்னாலும் நான் வரமாட்டேன். அது உங்களுக்கு அவமானத்தை தரும். அதை நான் விரும்பவில்லை. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மூலமாக நான் மூன்று வருடம் இஸ்லாத்தின் அடிப்படைக் கல்வி கற்க செல்கிறேன். உங்களுக்கு தமுமுகவிலிருந்து போன் வரும். நீங்கள் தயவு செய்து அங்கு வரவேண்டாம். உங்களை பார்த்துப் பேச எனக்கு தைரியம் இல்லை. என்னைப் புரிந்து கொள்ளுங்கள். தயவு செய்து எந்த தப்பான முடிவும் எடுக்காதீர்கள். மனோஜின் படிப்பிற்கு என்னால் உதவ முடியவில்லை. என்னை மன்னித்து விடுங்கள் எனக்கு வேறு யாரும் வேண்டாம். நீங்கள் இருவரும் என்னை வந்து பார்த்தால் போதும். என்னை அனாதை யாக விட்டு விடாதீர்கள். எல்லாருக்கும் இதைப் பற்றி சொல்லி புரிய வையுங்கள். உறவினர்கள். ஆயிரம் சொல்வார்கள், அதை கேட்டுக் கொண்டு என்னை ஒதுக்கி விடாதீர்கள். அம்மா அழாதீங்கம்மா!

ப்ளீஸ்… மேற்கொண்டு எந்தப் பிரச்சனையும் யாருக்கும் தரவேண்டாம். இந்த லெட்டரில் நான் எழுதியதோடு போகட்டும் உங்களுக்கு என்னைப் பார்க்க வேண்டும் என்று தோன்றினால் (தமுமுக) அணுகவும்.

அம்மா, நீங்க ஆசைபட்ட மாதிரியே பி.பி.ஏ., முடித்து எம்.பி.ஏ., படித்து முடிப்பேன். நீங்கள் தயவு செய்து வீடு மாறினாலும். போன் நம்பர் மாற்றினாலும். எனக்கு தயவு செய்து தெரிவிக்கவும். அம்மா ப்ளீஸ் என்னை ஏற்றுக் கொள்ளுங்கம்மா. நான் உங்களை கஷ்டப்படுத்தியதற்கு மன்னிக்கவும்.

இப்படிக்கு..

ரஜிதா (எ) ஹமிதா

ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி

செப்டம்பர் 25, 2008


இந்திய ஆட்சிப்பணியாளர்களின் தேர்வில் முஸ்லிம்களின் பங்களிப்பு மிகக்குறைந்தளவே இதுநாள் வரையிலும் இருந்துள்ளது. இவ்வாண்டு 27 முஸ்லிம்கள் தேர்வாகியுள்ளனர். அதில் இருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் முகமது சாதிக் அவருடைய மகள் மரியம் பர்சானா சாதிக். இவர் ஐ.ஏ.எஸ். தேர்வில் அகில இந்திய அளவில் 30வது ரேங்க்கும், தமிழக அளவில் பெண்கள் பிரிவில் முதலிடத்தையும் பெற்றுள்ளார்.

திருப்புமுனை:

பர்சானாவிற்கு 12 வயது இருக்கும்போது தனது தந்தையுடன் சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றிருக்கிறார். அப்போது அலுவலகத்திற்கு வந்த கலெக்டருக்கு அளிக்கப்பட்ட மதிப்பு, கவுரவம், கலெக்டருக்கு கிடைக்கக் கூடிய மரியாதை ஆகியவை இவருக்கு கலெக்டர் பதவி மீது ஏற்பட ஈர்ப்பின் காரணமா கலெக்டர் ஆக வேண்டும் என்று விரும்பினார். அவரது விருப்பத்தை தந்தை சாதிக் பர்சானாவின் சகோதரர் முகமது உசேன் சாதிக்கும் மலரச் செய்துள்ளனர்.

பர்சானா ராயபுரம் கெவின்ஸ் பள்ளியில் தொடக்கக் கல்வியையும், ஆயிரம் விளக்கு சர்ச் பார்க் கான்வென்டில் மேல்நிலைப் படிப்பையும் முடித்தார். அதன்பின் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் பி.காம். பட்டமும், தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி. மகளிர் கல்லூரியில் எம்.காம். பட்டமும் பெற்றார்.

டெல்லி வாஜிராம் ரவி ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்திலும், சென்னை கணேஷ் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்திலும் தீவிர பயிற்சி மேற்கொண்டார். எனினும் அவருக்கு வெற்றி எளிதாக கிடைத்து விடவில்லை. முதல் முயற்சியில் முதல்நிலைத் தேர்விலேயே தோல்வி அடைந்தார்.

அடுத்த முறையில் மெயின் தேர்வு வரை மட்டுமே அவரால் செல்ல முடிந்தது. ஆனாலும் நம்பிக்கையை இழக்காமல் தொடர்ந்து முயற்சியில் இறங்கினார். 3வது வாய்ப்பில் வெற்றிக்கனி கிடைத்தது. 2007ம் ஆண்டுக்கான ஐ.ஏ.எஸ். இறுதி தேர்வில் அகில இந்திய அளவில் 30வது ரேங்க் எடுத்து. தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற பெண்களில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

ஐ.ஏ.எஸ். தேர்வு எழுத முதலில் தன்னம்பிக்கை வேண்டும். நல்ல வழிகாட்டுதல் தேவை. அத்துடன் ஒரே மனதுடன் திட்டமிட்டு படிக்க வேண்டும். அப்படி படித்தால் யார் வேண்டுமானாலும் இந்த தேர்வில் வெற்றி பெற்று விடலாம்.

கலெக்டர் ஆக வேண்டும் என்பது எனது சிறுவயது ஆசை. ஒரு கலெக்டருக்கு சமுதாயத்தில் அளிக்கப்படும் மதிப்பும், மரியாதையுமே நானும் அந்த பதவிக்கு செல்ல வேண்டும் என்ற ஆசையை ஏற்படுத்தியது. ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு பொது அறிவுதான் அடிப்படை தேவை. இதற்காக டி.வி.யில் செய்தியை தவறாமல் கேட்பேன். இவ்வாறு தனது சாதனைப் பற்றி கூறுகிறார் பர்சானா, பர்சானாவின் தந்தை சாதிக்கின் இயற்பெயர் சக்திவேல் நாடார். பல ஆண்டுகளுக்கு முன்னரே இவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதுவை கவன ஈர்ப்பு மாநாட்டில் பெண்கள்

செப்டம்பர் 25, 2008

செப்டம்பர் 25, 2008

இளையான்குடி மாநாட்டில் பெண்கள்

செப்டம்பர் 25, 2008


Follow

Get every new post delivered to your Inbox.